tamilnadu

img

இந்தியா அறிவியல், தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும் - விஐடி வேந்தர் வலியுறுத்தல்

இந்தியா அறிவியல், தொழில்நுட்பத்தில்  முன்னேற வேண்டும் - விஐடி வேந்தர் வலியுறுத்தல்

வேலூர், செப்.27- இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமெனில் அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சியில் முன்னேற வேண்டும் என விஐடி பல் கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடியில் கிரா விடாஸ் 2025 எனும் மூன்று நாள் அறிவுசார் விழா வெள்ளியன்று தொடங்கி யது. தொடக்க விழாவில் பேசிய அவர், 1984-ல்  180 மாணவர்களுடன் தொடங்கிய விஐடி தற்போது 4 வளாகங்களில் 1 லட்சம் மாணவர்கள் படிப்பதாகத் தெரிவித்தார். 146 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 18-23 வயதுக்குட்பட்ட 14 கோடி பேரில் வெறும் 4 கோடிபேர் மட்டுமே உயர்கல்வி பெறு வதாக சுட்டிக்காட்டினார். அமெரிக்காவின் மொத்த  உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலர்களாக உள்ளதாகவும், அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறி அவர்களுடன் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தினார். ஆராய்ச்சி  மேம்பாட்டில் வளர்ந்த நாடு கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2-3 விழுக்காடு செலவிடும் நிலையில், இந்தியா 1 சதவீதத்துக் கும் குறைவாக செலவிடுவ தாகக் கூறினார். அபுதாபி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்  மஜித் அலி அல் மன்சூரி, நியூஸ்18 நிர்வாக ஆசிரியர் ஆனந்த் நரசிம்மன் ஆகி யோர் சிறப்பு விருந்தினர் களாகக் கலந்து கொண்டனர். மாணவர்கள் உருவாக்கிய டிரோன், ஏவு கணை, ரோபோக்கள் உள்ளிட்ட புதுமை படைப்பு களை வேந்தரும் சிறப்பு விருந்தினரும் பார்வை யிட்டு பாராட்டினர்.தொடக்க விழாவில் விஐடி  துணைத் தலைவர் சேகர்  விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்ட ரெட்டி, மேக்ஸிமஸ் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் பிரவீனா பீம வரப்பு, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதி வாளர் ஜெயபாரதி, கிரா விடாஸ் ஒருங்கிணைப் பாளர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.