tamilnadu

img

அமெ.வுக்கு போதைப் பொருள் கடத்துவது இந்தியா தான்!

அமெ.வுக்கு போதைப் பொருள் கடத்துவது இந்தியா தான்!

டிரம்ப் பகீர் குற்றச்சாட்டு

வாஷிங்டன், செப். 18 - டிரம்ப் இந்தியாவை சர்வதேச அள வில் தொடர்ந்து அவமானப்படுத்தி வரு கிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25  சத விகிதம் வரி விதித்தார். அதற்கு முன்ன தாக அமெரிக்காவில் உள்ள இந்தியர் களை கை மற்றும் கால்களில் விலங்கு பூட்டி, இந்தியாவிற்கு கைதிகளை போல நாடு கடத்தினார். பிரதமர் மோடி, அமெரி க்காவில் இருந்த போதே இவ்வாறு டிரம்ப்  அவமானப்படுத்தினார். இந்நிலையில், இந்தியா போதைப் பொருட்களை உற்பத்தி செய்து  கடத்துவ தாக புதிய குற்றச்சாட்டை கிளப்பி யுள்ளார்.  இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்தே போதைப் பொருட்கள் கடத்தப் படுகின்றன. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், ஆர்எஸ்எஸ்-ஸின் செல்லப்பிள்ளையுமான பெருமுதலாளி அதானியின் முந்த்ரா துறைமுகம் வழி யாகவே போதைப்பொருள் இந்தியா விற்குள் ஊடுருவுவதாக குற்றச் சாட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியா விலேயே அமெரிக்காவுக்கும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக டிரம்ப் பகீர்  குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், போதைப் பொருள் கடத்தும் நாடுகள் என இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான், தி பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், கொலம்பியா, கோஸ்டாரிகா, தி டொமினிசியன் ரிபப்ளிக் ஈகுவேடார், எல் சால்வடார், கவுதமாலா, ஹைட்டி, ஹொண்டூராஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகாரகுவா, பனாமா, பெரு, வெனிசுலா என பெரிய பட்டி யலையே டிரம்ப் வாசித்துள்ளார். இந்த நாடுகளே போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் முக்கியப் பங்கு வகிக் கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.