tamilnadu

img

ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவது விரைவில் பூஜ்ஜியமாகும்! டிரம்ப் மீண்டும் அறிவிப்பு; மோடி மவுனம்

ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவது விரைவில் பூஜ்ஜியமாகும்! டிரம்ப் மீண்டும் அறிவிப்பு; மோடி மவுனம்

நியூயார்க், அக். 23 - இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை அதிகளவில் குறைக்கும் என்று டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.   ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என டிரம்ப் தொட ர்ந்து இந்தியாவை மிரட்டி வருகிறார்.  இதற்காக இந்தியா மீது அபராத வரி களையும் விதித்துள்ளார். இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.  இந்நிலையில் ரஷ்யாவிடம் வாங்கும் கச்சா எண்ணெய் அளவை படிப்படியாக குறைக்க உள்ளதாக மோடி தன்னிடம் உறுதி அளித்துள் ளார் என்று டிரம்ப் பகிரங்கமாக கூறினார். இதற்கு நேரடியாக எந்த  மறுப்பையோ எதிர்ப்பையோ தெரி விக்காமல் மழுப்பலான பதிலையே இந்திய வெளியுறவுத்துறை அதி காரிகள் தெரிவித்திருந்தனர். அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் எரிபொருட்களின் அளவு அதிகரித்து வருவதாக இந்திய வெளி யுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார்.   இந்நிலையில் தான் இந்த ஆண்டு  இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை  இந்தியா அதிகளவில் குறைக்கும் என்று டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.   “உங்களுக்குத் தெரியும், ரஷ்யா விடம் இருந்து கச்சா எண்ணெய்  வாங்குவதை நிறுத்தப் போவதாக இந்தியா என்னிடம் கூறியுள்ளது. இது  ஒரு செயல்முறை. உடனடியாக (ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கு வதை) நிறுத்த முடியாது. இந்த ஆண்டு இறுதிக்குள், அவர்களது கொள்முதல் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருக்கும்” என்றார். இந்தியா தனது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் கொள்முதலில் சுமார்  40 சதவிகிதத்தை ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா மிரட்ட துவங்கியது முதல் ரஷ்யா வைத் தவிர்த்து, பிற நாடுகளிடம் இருந்தும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அந்த அளவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யின் அளவும் படிப்படியாக குறைந்து வந்துள்ளது.  ஆனால், இதுதொடர்பாக ஒன்றிய பாஜக அரசு வெளிப்படையாக எதுவும்  கூறாத நிலையில், இந்திய அரசின்  முடிவுகள் அனைத்தையும் டிரம்ப் வெளியிட்டு வருகிறார். பிரதமர் மோடி வழக்கம்போல மவுனமாகவே இருக்கிறார்.