ஓய்வுபெற்ற மின் ஊழியர்களுக்கு பணிக்கொடையை ரூ.25 லட்சமாக உயர்த்துக!
திருநெல்வேலி: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் நெல்லையில் திங்கள்-செவ்வாய்க்கிழமைகளில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். வர வேற்புக்குழு தலைவர் பீர் முகம்மது ஷா வரவேற்று பேசி னார். அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியன், சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொதுச் செயலாளர் டி.ஜெய்சங்கர் ஆகியோர் பேசினர். ஒரு லட்சம் ஓய்வூதியர்களை ஏமாற்றும் முத்தரப்பு ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஓய்வூதிய சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும். பணிக்கொடை ரூ. 20 லட்சத்தை 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவத்திற்காக செலவாகும் முழு தொகையையும் திரும்ப வழங்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த திட்டத்தை ஏற்று செயல் படுத்த வேண்டும், தின கூலி சேவை காலத்தை இணைத்து ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.