பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துக! அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
திருச்சிராப்பeள்ளி, ஜூலை 5 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் எழுச்சி நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்பட்டது. அதனொரு பகுதியாக நடந்த எழுச்சிநாள் கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். வருமான வரித்துறை சங்க மாடசாமி, சத்துணவு சங்க அமுதா ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்கில் துணைத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சிவசங்கர் நன்றி கூறினார். பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் ப. குமரி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சு.சரவணசாமி வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் சி.சுப்பிரமணியன் கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி எழுச்சி உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் இளையராஜா நன்றி உரையாற்றினார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின்படி சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசு ஊழியர்களிடம் பறித்த உரிமைகளை மீண்டும் வழங்க வலியுறுத்தப்பட்டது.