தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, இளங்கார்குடி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி சுற்றுச் சுவரின் ஒரு பக்க கேட் இல்லாமல் இரும்பு வேலியை அமைத்துள்ளதாக தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தற்போது கேட் அமைக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
