tamilnadu

img

குறைதீர் கூட்டத்தில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு பங்களிப்புத் தொகை வழங்கல்

குறைதீர் கூட்டத்தில்  2 மாற்றுத்திறனாளிகளுக்கு  வீடு பங்களிப்புத் தொகை வழங்கல்

தஞ்சாவூர், அக். 6- 
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 285 மனுக்களை பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில், “என் பாலிசி என் கையில்’’ திட்டத்தின் கீழ், குறுவைப் பருவத்தில், வங்கிகள் மூலம் விண்ணப்பித்த ஐந்து விவசாயிகளுக்கு பாலிசி ஆணையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில் நா. அனந்தராமன் என்பவருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளராக பணி நியமன ஆணையினையும், தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி அபர்ணா என்பவருக்கும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் சுந்தர மீனா நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் இனிய வீரா ஆகியோர், குடி இருக்க வீடு கேட்டு விண்ணப்பித்த அன்றே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், வீட்டிற்கான பங்களிப்புத் தொகை தலா ரூ.76 ஆயிரத்துக்கான காசோ லையினையும் ஆட்சியர் வழங்கினார்.