வாலிபர் சங்க நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்
போதை பொருளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேவநேசன் நகர் கிளை தலைவர் மணிதாமஸ் மீது சமூக விரோதக் கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதனை கண்டித்தும், போதைப்பொருள் மற்றும் சமூக விரோத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தாம்பரம் மாநகர பகுதி முழுவதும் புழங்கும் போதை பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (ஜூலை 30) பெருங்களத்தூரில் பீர்க்கன்கரணை காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, துணைத் தலைவர் சித்தன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஜானகிதேவி, தாம்பரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் அனந்தபிரியன், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் சிந்தனா உள்ளிட்டோர் பேசினர்.