தூய்மைப் பணிகள் தனியார் மயம் ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை, ஆக. 20 - சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்ட லங்களின் தூய்மைப் பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1-ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலு வலகமான ரிப்பன் மாளிகை முன்பு திரண்ட னர். இதற்கிடையே தூய்மைப் பணியா ளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுத்துவதாக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, “சாலையை மறித்துப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப் பணி யாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டார். இதையடுத்து 14 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணி யாளர்களைப் போலீசார் அப்புறப்படுத்தி னர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி யின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணி களைத் தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்யக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் தீர்ப்பில் கூறியதாவது: “தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழ வில்லை என்பதால் தூய்மைப் பணியைத் தனியார் வசம் ஒப்படைக்கத் தடை இல்லை. தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநக ராட்சி பேச்சுவார்த்தை நடத்தி கடைசியாக அவர்கள் பெற்ற ஊதியத்தை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியைத் தனியாருக்கு வழங்க மாநக ராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது. சென்னை மாநகராட்சி யில் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கத் தடை விதிக்க முடியாது” என்று கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.