அரசுத் திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயர் கூடாது! உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரையும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு முன்பு வெள்ளிக் கிழமையன்று (01.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படை யில் அரசுத் திட்டங்களில் முதலமைச்சரின் புகைப்படத் தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதலமைச்சரின் புகைப்படத்தையோ பயன் படுத்துவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது. அதேபோல அரசுத் திட்டங்களின் பெயரில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. ஆளும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது ஆகும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், “அரசு நலத்திட்டம் தொடங்குவது, செயல் படுத்துவதற்கு எதிராக தாங்கள் எந்த உத்தரவும் பிறப் பிக்கவில்லை” என்ற நீதிபதிகள், “தமிழக அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது” என்றனர்.
2.42 கோடி பேர் பயன்
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதில் திமுக ஆட்சியில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடியே 42 லட்சம் பேருக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதழியல் படிக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை: இதழி யல் துறையில் முது நிலை பட்டயப் படிப்பை வழங்கும் சென்னை இத ழியல் கல்வி நிறுவனத் தின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப் பிக்க கடைசி நாள் ஆக.3 என்று அறி விக்கப்பட்டி ருந்தது. அது தற்போது ஆக.10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக் கிறது. இத்துடன் அச்சு மற்றும் தொலைக் காட்சி, வானொலி, இணைய ஊடகங்களில் செயல்படுவதற்கான பாடத்திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.
அரசுகளுக்கு அழுத்தம்
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர்ந்து பல்லாண்டு காலமாக மாநில அரசை வலியுறுத்தி வரு கிறது. இந்நிலையில், ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் கொண்டு வர ஒன்றிய-மாநில அரசுகளுக்கு உரிய அழுத்தம் கொடுப்போம் என்று மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் தமிழ்வாணன் உறுதியளித்துள்ளார்.