கம்பம், கூடலூர், பாளையத்தில் கனமழை
ஊருக்குள் புகுந்த வெள்ளம்; வீடுகள், நெற்பயிர்கள் சேதம்; ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 40 ஆடுகள்
தேனி, அக்.19- கம்பம், கூடலூர், பாளையம் ஆகிய பகுதிகளில் கனமழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. 10க்கும் மேற்பட்ட வீடுகள், நெற் பயிர்கள் சேதமடைந்தன. 40 ஆடு கள் ஆற்றில் அடித்து செல்லப்பட் டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை தேனி மக்களவை உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரில் பார் வையிட்டனர். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 24ம் தேதி குறை ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உரு வாக வாய்ப்புள்ளதால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்க ளில் வெள்ளியன்று கனமழை பெய் தது. அதன்படி தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி மற் றும் சுற்றுப்புற கிராமங்களில் இரவு 10 மணி முதல் விடிய விடிய இடை விடாமல் கனத்த மழை பெய்தது. இதனால் கம்பம் மேற்குப்பகுதி யில் மலை அடிவாரப்பகுதியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் பெரு க்கெடுத்து ஓடியது. தண்ணீர் செல் வதற்கான ஓடைகள் ஆக்கிர மிப்பில் இருந்தால் மழைநீர் விவ சாய நிலங்கள் வழியாக கம்பம் நக ருக்குள் புகுந்தது. இதற்கிடையில் பழைய போலீஸ் சாதனை சாவடி அருகே செல்லும் 18ம் கால்வாய் தொட்டி பாலம் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் கம்பம்மெட்டு சாலை, ஓடைக் கரைத்தெரு, ஆங்கூர்பாளையம் சாலை, நந்தகோபால் சாமி நகர், டி.டி.வி தினகரன் நகர், பார்க்ரோடு, காமயகவுண்டன்பட்டி சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஓடைகளை ஒட்டியுள்ள வீடு களில் தண்ணீர் புகுந்ததால் பொது மக்கள் விடிய விடிய தூக்கமில்லா மல் அவதியடைந்தனர். இதே போல் கம்பம் அருகேயுள்ள மஞ் சள்குளம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. மேலும் சின்ன வாய்க்கால் கரையும் உடைந்த தால் வயலுக்குள் தண்ணீர் புகுந் தது. இதனால் நெல் பயிர்கள் சேத மடைந்தன. உத்தமபாளையம் களிமேட்டு தெரு பகுதிகளில் உள்ள குடி யிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந் தது. இதில் ஒரு சில வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமானது. நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவி ர்க்கப்பட்டது. இருப்பினும் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர். மூல வைகை கோம்பை பகுதி யில் காட்டாற்று வெள்ளம் காவல் நிலையம் அருகே குடியிருப்பு பகு திகளை சூழ்ந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. கூடலூரில் 6 வது வார்டில் 5 வீடுகள் இடிந்து சேதமா னது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஏரியா செயலாளர் பி.ஜெய ராஜ், ஏரியாக்குழு உறுப்பினர்கள் அய்யப்பன், பிரியா ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உரிய நிவாரணம் பெற விண்ணப் பித்தனர். பாலம் மூழ்கியது முல்லைப்பெரியாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் சுருளிப்பட்டி பாலம் மூழ்கியது. மேலும் பூதிமேட்டு களம் அருகே சாலையில் தண்ணீர் அதிகளவில் சென்றதால் , கம்பம் சுருளிப்பட்டி சாலையில் பொதுமக்கள் செல்ல தடை விதித்தனர். மேலும் அப்பகு தியில் கயிறுகள் கட்டப்பட்டு வாக னங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லவிடாமல் காவல்துறையி னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர். இந்த மழையால் கம்பம் பகுதி யில் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடு கள் இடிந்து விழுந்தன. சுருளிப்பட்டியில் முல்லைப் பெரியாறு ஆற்றின் அருகே உள்ள இறைச்சிகளுக்காக கொட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த 40 ஆடுகள் வெள்ளத்தால் அடித்து செல்லப் பட்டன. இதுகுறித்து தகவலறிந்த தேனி எம்.பி தங்கதமிழ்செல்வன், நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் ஆகியோர் மழை சேதங்களை ஆய்வு செய்தனர். ஆய்விற்கு பின் தங்க.தமிழ்செல் வன் எம்.பி. கூறுகையில், முதல் போக நெல் சாகுபடி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வெள் ளப்பெருக்கால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் சுருளிப்பட்டி லட்சும ணனுக்கு சொந்தமான 40 ஆடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. சேதமடைந்த விவசாயிகள் பொது மக்கள் உரிய நிவாரணம் கிடைப்ப தற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள நீரோடைகள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தேனி தேனி அருகே முல்லைப்பெரி யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெரு க்கு ஏற்பட்டு தண்ணீர் உப்புக் கோட்டை கிராமத்தில் உள்ள குடி யிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இத னால் பாதிக்கப்ட்டவர்கள் பிற் பகல் 12.30 வரை குழந்தைகள், முதி யவர் என சாலையில் செய்வதறி யாது காத்திருந்தனர். பழனிசெட்டிபட்டி ஆஞ்ச நேயர் தெருவில் முல்லையாற்று வெள்ளம் புகுந்து குடியிருப்பு களை சூழ்ந்து கொண்டது. வீர பாண்டியில் சாலை வெள்ளமாக காட்சியளித்தது. வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான ஆண்டிபட்டி அருகே உள்ள வெள்ளிமலை, மேகமலை, அரசரடி, பொம்மராஜபுரம் வருஷ நாடு உள்ளிட்ட சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் வெள்ளியன்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக வைகை ஆற் றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. ஆற்றில் கரைபுரண்டு வந்த வெள்ள நீர் தேனி - வருசநாடு சாலையில் பல்வேறு இடங்களில் புகுந்தது. இதனால் அந்தப் பகுதி களில் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. சாலையில் தேங்கி இருந்த தண்ணீர் சிறிதளவு வடியத் தொட ங்கியதும் வாகனங்கள் தண்ணீ ருக்குள் மெதுவாக சென்றது. வருஷநாடு முதல் கண்டமனூர் வரையிலான வைகை ஆற்றங்க ரையோரம் உள்ள பல்வேறு தோட்டங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் விளைநிலங்கள் அனைத்தும் தண்ணீரால் நிரம்பி காட்சியளித்தது. இழுத்து செல்லப்பட்ட மின்மாற்றி சின்னமனூர் - மார்க்கையன் கோட்டை சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரை களை வெள்ளநீர் கடந்து செல்வ தால் சாலையோரம் இருந்த மின் மாற்றி ஒன்று சாய்ந்து விழுந்து ஆற்று நீரில் இழுத்துச் செல்லப் பட்டது. 8 ஆயிரம் கோழிகள் பலி தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் டி.ஆர். புரம் பகுதியில் உள்ள தனி யார் தோட்டத்தில் குத்தகை அடிப்படையில் தனியார் நிறு வனம் மூலம் கோழிப்பண்ணை அமைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் வெள்ளி இரவு தேவாரம் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பிள்ளை யார் ஊத்து ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு கோழிப்பண் ணைக்குள் புகுந்தது. இதனால் நன்கு வளர்ந்து தீபாவளி பண்டி கைக்காக விற்பனைக்கு அனுப்ப தயாராக இருந்த சுமார் 8000க்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி பலியானது. தகவல் அறிந்து வந்த உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் சையது அகமது மற்றும் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும் ஓடையில் ஏற்பட்ட அடைப்பை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வரு கிறது. அருவிகளில் வெள்ளப் பெருக்கு குளிக்க தடை தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி, கும்பக்கரை, மேகமலை, போடி அருகே அணைப்பிள்ளை யார் தடுப்பணை ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
