தனி நலவாரியம் அமைக்க சுமைப் பணித் தொழிலாளர் மாநாடு கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, செப்.22 - தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் 10 ஆவது மாநில மாநாடு திருச்சியில் ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் நடைபெற்றது. முதல் நாளான ஞாயிறன்று நடந்த பொதுமாநாட்டிற்கு சம்மேளனத் தலை வர் ஆர்.வெங்கடபதி தலைமை வகித்தார். மாநாட்டுக் கொடியை சம்மே ளன துணைத் தலைவர் எம். அர்த்த நாரி ஏற்றினார். சம்மேளன துணைச் செயலாளர் ஆர்.சிவக்குமார் வரவேற் றார். அஞ்சலி தீர்மானத்தை சம்மேளன துணைத் தலைவர் அ.பிச்சைமுத்து வாசித்தார். சிஐடியு மாநிலச் செயலா ளர் சி. திருவேட்டை துவக்க உரை யாற்றினார். நடைபெற்ற பணிகள் - அமைப்பு அறிக்கையை சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.அருள்குமார் வாசித் தார். நிதிநிலை அறிக்கையை சம்மேளன பொருளாளர் பி.குமார் சமர்ப்பித்தார். இரண்டாம் நாளான திங்களன்று நடந்த மாநாட்டில் குத்துசண்டை வீரர் முகமது அலியின், ‘நிறவெறிக்கு எதிரான அரசியல் களம் குறித்த நானே மகத்தானவன்’ என்ற புத்தக வெளி யீட்டு விழா நடைபெற்றது. புத்தகத்தை சம்மேளன தலைவர் ஆர்.வெங்கடபதி வெளியிட அதனை சம்மேளன சிறப்பு தலைவர் எஸ்.குணசேகரன் பெற்றுக் கொண்டார். சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.ரெங்கராஜன், சுமைப்பணி சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர். ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சுமைப் பணி தொழிலாளர்களுக்கு கேரளா போல் தனி நலவாரியம் உரு வாக்க வேண்டும். சுமைப் பணி தொழி லாளர்களின் வேலை பாதுகாப்பை உத்தரவாதப் படுத்தும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஆர்.வெங்கடபதி, சிறப்பு தலைவராக எஸ். குணசேகரன், பொதுச் செயலாளராக ஆர்.அருள் குமார், பொருளாளராக பி.குமார், சம்மே ளன துணைத் தலைவர்களாக அ.பிச்சை முத்து, த.முருகேசன், எம்.அர்த்தநாரி, ஆர்.ராஜன், அ.சுடலைக்காசி, இ.பழனி, கே.கஜேந்திரன், தா.ஆதிமூலம், சம்மேளன துணைச் செயலாளர்களாக ஏ.கோவிந்தன், ஆர்.பாண்டி, எம்.எஸ். பீர்முகமது, ஆர்.சிவக்குமார், ஆர். உத்திராபதி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் நிறைவுரையாற்றினார். சம்மேளன துணைச் செயலாளர் ஆர்.சிவக்குமார் நன்றி கூறினார். பின்னர், திருச்சி காந்தி மார்க்கெட் காந்தி சிலையிலிருந்து சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கை விளக்க பேரணி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு குட்செட் ரோடு முதலியார் சத்தி ரத்தில் தோழர் எம்.ஏ.பாபு நினைவுத் திடலில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. சிஐடியு லாரி புக்கிங் ஆபீஸ் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் திருச்சி மாவட்டச் செயலாளர் ராமர் நன்றி கூறினார்.