tamilnadu

img

அரசு-தனியார் அலுவலகத்தில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட மாநாடு கோரிக்கை

அரசு-தனியார் அலுவலகத்தில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட மாநாடு கோரிக்கை

கரூர், அக். 11-  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட மாநாடு, சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ். அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் கே.இளங்கோ அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாவட்ட துணைத் தலைவர் சங்கர் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.செல்வராணி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம் வேலை அறிக்கையை முன்வைத்துப் பேசினார். மாவட்ட பொருளாளர் எல்.பாலசுப்பிரமணியன் வரவு-செலவு அறிக்கையை முன்வைத்து பேசினார்.  சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், அரசு ஊழியர் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ராஜா, டிஎன்எஸ்ஒயு சங்க மாநில துணை தலைவர் செ.முருகேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாநில துணை தலைவர் ஆ. அம்சராஜ் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் வ.கோபி நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கரூர் மாவட்டத்தில் அதிகப்படியான பெண் ஊழியர்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்காக கரூர் மாவட்டத்தில் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.  அக்கமிட்டி 2 மாதத்திற்கு ஒருமுறை கூடி பெண் ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க முன்வரவேண்டும்.  பணிநேரம் தவிர்த்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதையும், விடுமுறை தினங்களில் காணொலி மூலம் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதையும் கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.