tamilnadu

img

சாதிவெறியர்களைச் சாடிய கோபி - சுதாகருக்கு குவியும் லைக்ஸ்

சாதிவெறியர்களைச் சாடிய   கோபி - சுதாகருக்கு குவியும் லைக்ஸ்

திரைப்பட பாடல்கள், வசனங்களைக் கொண்டு  ரீல்ஸ்களாக சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ‘லைக்ஸ்’களை பெற்று புளகாங்கிதம் அடைவோரும் அதைப்பார்த்து பொழுதுபோக்குவோரும்  இன்று பெருகி விட்டனர். சமூக விரோதிகளை ஹீரோவாக சித்தரித்து ரீல்ஸ்கள் வெளி யிடும் அபாயமும்  நடக்கிறது.  இந்நிலையில், இளைஞர்கள், மாணவர்கள் உட் பட மக்கள் அன் றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், வேலைக்காக சந்திக்கும் கஷ்டங்கள், பணி யிடத்தில் சந்திக்கும் சிரமங்களை “பரிதாபங்கள்” யூ டியூப்சேனலில் கோபி-சுதாகர் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். தற்போது வெளி யிட்டுள்ள சொசைட்டி பாவங்கள் என்ற தலைப்பிலான வீடியோக்கள் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சில பேருக்கு கடுப்பையும் கிளப்பியுள்ளது.

சாதி ஆணவக்கொலைகளை விமர்சித்தும் இதன்பின்னால் உள்ள சாதி ஆதிக்கச் சக்தியினரின் சுயநல அரசியலையும் அச்சமூக இளைஞர்களை வெற்றுப் பெருமைப்பேசி தவறான பாதையில் நடத்தி வாழ்க்கையை சீரழிப்பதையும் நகைச்சுவையாக நடித்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள்தான் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.சாதி ஆணவக்கொலைகளை கண்டிப்பதும் அதனைத் தடுக்க தனி சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும் என்பது முக்கிய பேசுபொருளாகவும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளாகவும் எழுந்துள்ள இச்சூழலில் கோபி-சுதாகர் ஆகியோரின்  விழிப்புணர்வு வீடியோ முக்கிய கவ னத்தைப் பெற்றுள்ளது. சாதிவெறியர்களை அம்பலப்படுத்த இவர்களின் வீடியோக்களை ‘ஷேர்’ செய்யலாம்.

இவர்களின் இத்தகைய முயற்சிகளை ஜனநாயக, முற்போக்கு சக்திகள், தீண்டாமைக்கு எதிரான களச் செயற்பாட்டாளர்கள் பாராட்ட  வேண்டும். அவர்களுக்கு துணைநிற்க வேண்டும்.