உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம பல்கலை. பேராசிரியர்கள்!
சின்னாளபட்டி, செப். 24 - உலகின் சிறந்த முதல் 2 சதவிகித விஞ்ஞானிகளின் பட்டியலை அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல் கலைக்கழகத்தைச் சேர்ந்தப் பேராசிரியர் ஜான் லொன்னிடிஸ் மற்றும் அவ ரது குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இதில், விஞ்ஞானிகள் வெளியிட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள், புலம் மற்றும் துணைப் புலம் சார்ந்த சதவிகிதங்களின் அடிப் படையில் 22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணை த்துறைகளில் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் வகைப்படுத்தப்படுகின்ற னர். இந்த பட்டியலில், உல கம் முழுவதும் 2 லட்சத்து க்கும் அதிகமான ஆராய்ச்சி யாளர்களும், இந்தியா வில் இருந்து 3500-க்கும் அதிகமான ஆராய்ச்சியா ளர்களும் இடம் பிடித்துள்ள னர். இந்நிலையில், 2024 ஆண்டிற்கான உலகின் சிறந்த முதல் 2 சதவிகித விஞ்ஞானிகளின் பட்டிய லில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த விஞ்ஞானி முனைவர் முரளிதரன் (இயற்பியல் துறை), விஞ்ஞானி முனைவர் பி.பாலசுப்பிரமணியம் (கணிதவியல் துறை), விஞ்ஞானி முனைவர் எஸ். மீனாட்சி (வேதியியல் துறை), விஞ்ஞானி முனை வர் கே.மாரிமுத்து, (இயற்பியல் துறை), முனை வர் க. அசோக்குமார் (வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் புலம்), முனைவர் பா. மலைக் கொழுந்தன் (உயிரியல் துறை) ஆகிய 6 பேர் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர். இந்நிலையில் தான், இவர்கள், தொடர்ந்து 6 ஆண்டாக, உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டிய லுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர். சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு பல் கலைக்கழகத் துணை வேந்தர் பேரா. ந. பஞ்சந்தம், பதிவாளர் (பொ) பேரா. எம். சுந்தரமாரி மற்றும் சக பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து களைத் தெரிவித்து வரு கின்றனர்.