தந்தை பெரியார் நினைவகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா வட்டத்தில் வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்ட அரூக்குற்றியில் ரூ.3.99 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை (செப்.26) கேரள மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சஜி செரியன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் வர்கீஸ், கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில்அண்ணா, சேர்த்தலா வட்டாட்சியர் ஸ்ரீஜா, அரூகுற்றி கிராம பஞ்சாயத்து தலைவர் அஷ்ரஃப் வெல்லேழத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
