tamilnadu

img

மேம்பாலம், தார்ச் சாலை பணிகள்: போக்குவரத்து, அமைச்சர் தொடங்கி வைத்தார்

மேம்பாலம், தார்ச் சாலை பணிகள்:  போக்குவரத்து, அமைச்சர் தொடங்கி வைத்தார்

அரியலூர், அக். 7-  கிராம மக்களுக்கு, போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் மேம்பாலம், தார்ச் சாலை உள்ளிட்ட 10 வகையான திட்டப் பணிகளை ரூ.16 கோடியில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில், பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதில், பல்வேறு கிராம மக்கள் பயன்பெறும் வகையில் வங்காரம் சாலையில் உள்ள உப்பு ஓடையில் ரூ.8 கோடியே 16 லட்சம் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம், அயன்தத்தனூர் முதல் அங்கனூர் வரை ரூ.4 கோடியில் சாலை மேம்படுத்தும் பணி, முல்லையூர் நடுநிலைப் பள்ளியில் ரூ.35 லட்சத்திள்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணி,  இலைக்கடம்பூர் ரயில்வே கேட் முதல் நத்தக்குழி வரை ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச் சாலை அமைக்கும் பணி என ரூ.16 கோடியே 17 லட்சம் மதிப்பிலான பத்து வகையான நலத்திட்ட பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.  இதனையடுத்து முல்லையூர், உகந்த நாயகன் குடிக்காடு கிராமங்களில் நெய்வேலி நிலக்கரி ஆலையின் மூலம் தன் விருப்ப நிதியிலிருந்து அமைக்கப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.