tamilnadu

img

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம்

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம்

தூத்துக்குடி, செப். 6- கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்ச  ரூபாய் மதிப்புள்ள இயந்திரம் மற்றும்  மூலப் பொருட்கள் எரிந்து சேதமாகின. தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி திட்டங்குளத்தில் உள்ள தொழிற் பேட்டையில் முத்தையம்மாள் தெருவைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன்  என்பவர் சாய்ராம் மேட்வின் என்ற பெய ரில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வரு கிறார். சனிக்கிழமையன்று பணியாளர்கள் வழக்கம்போல பணிபுரிந்து கொண்டிருந் தனர். அப்போது தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில்  திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது. இதனைப் பார்த்த பணியாளர்கள் அவசர மாக வெளியேறினர். மேலும் கோவில்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரம் மற்றும் மூலப் பொருட்கள் எரிந்து சேதமாகின. தீ விபத்து  குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.