தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்
சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த செப்டம்பரில் ரயில் பெட்டிகளில் பயணச் சீட்டு சோதனை மேற்கொண்டதில் அபராதமாக ரூ.6.25 கோடி வசூலிக் கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே சார்பில் விடுத்துள்ள செய்தியில், அனைத்து ரயில் நிலையங்களி லும் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர் கள், ரயில்வே விதிகளை மீறுபவர்கள் ஆகியோரை கண்ட றிந்து அவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படுவது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, பாலக்காடு, சேலம் ஆகிய ஆறு கோட்டங்களிலும் கடந்த செப்டம்பரில் ரயில் பயணச் சீட்டு சோதனைகள் நடைபெற்றன. அதன்படி, ரயில்களில் பயணச்சீட்டுகள் பெறாமலே பயணித்ததாக 1,21,189 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவர்களிட மிருந்து ரூ.6.25 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும், இது அபராத வசூலிப்பில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச வசூலாக உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.