tamilnadu

img

திரைக் கலைஞர் மதன் பாப் உடல் தகனம்

திரைக் கலைஞர் மதன் பாப் உடல் தகனம்

சென்னை, ஆக.3 - தமிழ் சினிமாவின் பிரபல  நகைச்சுவை நடிகர் மதன்  பாப் (71) உடல்நலக் குறை வால் சனிக்கிழமை இரவு சென்னையில் காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் சிகிச்சை பல னின்றி மரணமடைந்தார். மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. அடிப்ப டையில் இசைக்கலைஞரான இவர் கிட்டாரிஸ்ட்டாகவும், தூர்தர்ஷன் டிவியில் இசைக் கலைஞராகவும் பணியாற்றி யுள்ளார். கே.பாலசந்தரின் அறிமுகத்தால் நடிப்பில் இறங்கிய  அவர், ‘நீங்கள் கேட்டவை’ படத்தில் கீ போர்டு ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்த இவர், சினிமா தவிர்த்து டிவி காமெடி ஷோக்களிலும் நடுவராக பணியாற்றியுள்ளார். மேடை  நாடகம், விளம்பரங்கள், டிவி சீரியல்கள் என பலவற்றி லும் சிறப்பாக செயல்பட்ட இவர், இளம் வயதில் குத்துச்சண்டை வீரராகவும் இருந்துள்ளார். மதன் பாப்பின் உடல் சென்னை திருவான்மியூரில் உள்ள  அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரை  பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பெசன்ட் நகர் மின் மயா னத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.