tamilnadu

img

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து முளைத்த நெல் மணிகள் விவசாயிகள் கவலை

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து முளைத்த நெல் மணிகள் விவசாயிகள் கவலை

கடலூர், அக். 23- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள தாழம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயி கள் விளைவித்த நெல்மணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நெல்மணிகளை முறையாக அரசு கொள்முதல் செய்யாமல் பல நாட்களாகத் தேக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக மழையில் நனைந்து நெல்மணிகள் அனைத்தும் முளைத்துள்ளன. இதனால் சுமார் 3000 மூட்டை நெல்மணிகள் முளைப்புத் தட்டி பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கஷ்டப்பட்டு விளைவித்த நெல் மணிகள் வீணாகிப் போனதால் விவ சாயிகள் கவலையடைந்துள்ளனர். அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப் பட்டுள்ள நெல் மணிகளைத் தேக்கி வைக்காமல் உடனடியாகக் கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.