tamilnadu

img

பிள்ளையார் குப்பம் அருகில் தடுப்பணை அமைக்கவேண்டும் விவசாயிகள் ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

பிள்ளையார் குப்பம் அருகில்  தடுப்பணை அமைக்கவேண்டும் விவசாயிகள் ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, செப்.25 - திருநாவலூர் கெடிலம் ஆற்றில் பிள்ளையார் குப்பம் அருகில் தடுப்பணை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருநாவலூர் மேற்கு ஒன்றியம் 7வது மாநாடு பிள்ளையார்குப்பத்தில் ஒன்றிய தலைவர் கே.அய்யனார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணைத் தலைவர் நன்னாரம் கே.ஜோதி கொடியேற்றி வைத்தார்.ஒன்றிய செயலாளர் எஸ். வேல்முருகன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.மாவட்டத் தலைவர் டி. ஏழுமலை துவக்க உரையாற்றினார்.ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கியதாஸ் வேலை அறிக்கையையும் பொருளாளர் டி.சிவக்குமார் வரவு செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர்.மாவட்டத் துணைச் செயலாளர் எம்.வி.ஏழுமலை, விதொச ஒன்றிய செயலாளர் கே.ஆனந்தராஜ், கரும்பு விவசாயிகள் சங்க மத்திய கமிட்டி உறுப்பினர் எஸ்.ஜோதிராமன்,மாவட்ட செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி நிறைவு றையாற்றினார்.ஒன்றிய குழு உறுப்பினர் களமருதூர் கே. சக்திவேல் நன்றி கூறினார். தீர்மானம் உரம்,யூரியா,கட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும், கிசான் திட்டத்தின் மூலம் விடுபட்ட நபர்களுக்கு கிசான் சமன் நிதி வழங்க வேண்டும், விவசாய நிலங்களில் உள்ள பெயர்களை வன விலங்குகள் அழிப்பதை தடுக்கவேண்டும், கேரளா அரசை போல் காட்டுப்பன்றிகளை ஒழித்திட வாய்வழி மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கவேண்டும், உளுந்தூர்பேட்டை வட்டம்,திருநாவலூர் ஒன்றியம்,ஆத்தூர் ஊராட்சி,பரமநத்தம்,வேலூர் ஊராட்சி,நன்னாவரம்,திருநரங்குன்றம்,தட்டாம் பாறை,இருந்தை ஆகிய கிராமங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் மனைப்பட்டா வழங்கவேண்டும், உளுந்தூர்பேட்டை வட்டம்,திருநாவலூர் ஒன்றியத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு மனு கொடுத்த அனை வருக்கும் மின்இணைப்பு வழங்க வேண்டும், விவசாயிகளின் விலை பொருள்க ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்கிடவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக டி.சிவக்குமார், செய லாளராக எஸ்.ஆரோக்கியதாஸ், பொரு ளாளராக எஸ்.வேல்முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.