கொள்ளிடம் ஆற்றில் வீணாகும் உபரி நீரை சேமிக்க தடுப்பணை: விவசாயிகள் கோரிக்கை
சிதம்பரம், ஜூலை 5 - கொள்ளிடம் ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை விவசாய பணி களுக்கு சேமித்து வைக்க முடியாமல் உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட கதவணை பணி கள் முடிவடையாத நிலை யில் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் நேராக கடலில் கலந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் முக்கொம்பு மேலணை, கல்லணை, கீழணை வழியாக கொள்ளி டம் ஆற்றின் வழியாக சென்று நேரடியாக கடலில் கலக்கிறது. இந்த நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததால் கீழணையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூ ருக்கும் இடையே கொள்ளி டம் ஆற்றின் குறுக்கே ரூ.400 கோடி மதிப்பில் கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் 1 டி.எம்.சி தண்ணீர் தேக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கிடைக்கும், அதேபோல் இந்த பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பு நீராக மாறாமல் பாதுகாக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முழு கொள்ள ளவை எட்டியுள்ள நிலை யில் உபரி நீர் கொள்ளி டம் ஆற்றில் வெளியேற்றப் படுகிறது. கடந்த 4 நாட்க ளாக வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடத்தில் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அந்த தண்ணீரை சேமித்து வைக்க தடுப்பணை பயன்பாட்டுக்கு வராததால் திறக்கப்படும் உபரி நீர் அனைத்தும் வீணாக கடலில் கலந்து வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது தடுப்பணை பணி கள் 95 விழுக்காடு முடிவு பெற்றுள்ளதாகவும், இன்னும் சிறு சிறு பணிகள் தான் உள்ளதாகவும் தெரி வித்தார். ஆனால் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் தடுப்ப ணையை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அணையை கட்டு வதற்கு முன் அனுமதி பெறாமல், கட்டி முடித்த பிறகு அனுமதிக்கு காத்தி ருப்பது என்பது பாச னத்திற்கு தண்ணீரை தேக்கு வதற்கு கால தாமதத்தை ஏற்படுத்தும் என்று விவ சாயிகள் கூறுகின்றனர். விரைவில் தடுப்பணையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.