tamilnadu

அனைத்து நெல் மூட்டைகளையும் விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் கோரிக்கை

அனைத்து நெல் மூட்டைகளையும் விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை, அக்.6 - டெல்டா மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் பல்லாயிரக்கணக் கான நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடு துறை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் குறுவை அறு வடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்களை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் பல நாட்கள் காத்திருக்க  வேண்டிய நிலை உள்ளது.  குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவையாறு, அம்மாப்பேட்டை ஆகிய ஒன்றியங்களிலும், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் அறு வடை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மூட்டை நெல்கள் பத்து - பதினைந்து நாட்களாக கொள்முதல் செய்யப்படாமல் சாலைகளிலும், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் கொட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், இந்த நெல்மணி கள் முழுவதும் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. எனவே, மாநில அரசு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்  மூலம் அனைத்து நெல் மூட்டைகளையும் விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஈரப்பதம் 17 சதவீதம் என்பதை 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்திட வேண்டும்.  கொள்முதல் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான நெல்  மூட்டைகள் அந்தந்த நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் தேங்கியிருப்பதால், நெல் கொள்முதலில் பெரிய தாமதம் ஏற்படுகிறது. எனவே, உடனடியாக கொள்முதல்  செய்யப்பட்ட நெல்லை அரசு மற்றும் தனியார் கிடங்குகளிலும், தேவையேற்பட்டால் திறந்தவெளி கிடங்குகளிலும் சேமிப்ப தற்கான பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.  நெல் கொள்முதலில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையை சரி செய்வதற்கு, தேவையான இடங்களில் நடமாடும் (Mobile) கொள் முதல் நிலையங்களை அமைத்து, விரைந்து அனைத்தையும் கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு சார்பில் மாநில அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.