புகையான் நோய்த் தாக்குதல் சேதமான பயிர்களை கணக்கெடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
நாகப்பட்டினம், அக்.15 - புகையான் நோய்த் தாக்குதலில் சேத மான குறுவை நெற்பயிர்களை கணக்கெ டுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கீழ்வே ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப் பட்டுள்ளது. கதிர் முற்றி அறுவடை செய்யும் நேரத்தில், இரவு நேரங்களில் பெய்த மழை யின் காரணமாக பயிர்களில் இறுக்கம் ஏற்பட்டு புகையான் நோய்த் தாக்குதலாகி பயிர்கள் எரிந்து நாசமானது. அறுவடை செய்து மகசூல் கைக்கு வரும் நிலையில் ஏற்பட்ட இந்த புகையான் நோய் தாக்குதலால், விவசாயிகளுக்கு பெரிதும் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நி லையில் புகையான் பாதிப்பால் பாதிக்கப் பட்ட நெற்பயிர்களை வேளாண்மை துறையி னர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தும் இதுவரை கணக்கெடுப்பு பணி களை மேற்கொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் செய்கிறது. இதனை கண்டித்து நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, வேதராண்யம் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு புதனன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புகை யான் பாதிப்பை கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 2024-25 ஆண்டில் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இருப்பு வைக்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அம்பிகாபதி, ஒன்றியச் செயலாளர்கள் பாண்டியன், மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலா ளர் முத்தையன், வி.தொ.ச ஒன்றியச் செய லாளர் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
