tamilnadu

img

சுதந்திரம் அடைந்து 79 வருடங்கள் ஆகியும் மருத்துவம் முழுமை அடையவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

சுதந்திரம் அடைந்து 79 வருடங்கள் ஆகியும் மருத்துவம் முழுமை அடையவில்லை

அறந்தாங்கி ஆக. 19- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் நாகுடியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நாகுடியை பூர்வீக மாக கொண்ட மனோன்மணி சண்மு கம் நினைவாக நாகுடி மற்றும் சுற்று வட்டார கிராம மக்களின் நலனுக்காக ஆர்.ஆர்.பி மஹாலில் (நாகுடி) இந்த  இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது. இந்த மருத்துவ முகாமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகை யில், “நமது நாடு 1947 நள்ளிரவில் சுதந்தி ரம் அடைந்த போது முதன் முதலாக தேசியக்கொடி ஏற்றி உரையாற்றிய முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பேசும்போது, நாட்டில் கல்லாமை, இல்லாமை. அறியாமை போக்க மற்றும் நோய் இல்லாத வாழ்க்கை மக்களுக்கு உருவாக்கித் தரவேண்டும். அதுதான் சுதந்திரம் பெற்றதின் உண்மையான அர்த்தம் என்று கூறினார்.  இன்றைக்கு சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றைக்கும் ஒன்றிய அரசு மருந்து  மாத்திரைகளுக்கு பணம் கொடுக் கிறார்கள். மாநில அரசும் கொடுக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா தலைமை மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை என்று மருத்துவம் பார்க்க பல வசதிகள் இருக்கின்றது. இருந்தாலும், அரசு புள்ளிவிவரம் சொல்லுவது மொத்த மருத்துவ செலவுக்கு அரசு ரூ.50 கொடுத்தால் - மக்கள் ரூ.50 கொடுக்கிறார்கள். அப்படி செய்தும் இன்றைக்கு அனை வருக்கும் மருத்துவ வசதி அளிக்கப்பட வில்லை. ஒன்றிய, மாநில அரசுகள் பல மருத்துவ சேவை திட்டங்கள் செயல்படுத்தினாலும் மக்கள் முழுமை பெறவில்லை.  அறந்தாங்கி பகுதியில் போதைப் பொருட்கள் அதிகரிப்பால் பெண்கள் மீதான வண்கொடுமை கொலைகள் நடைபெறுகின்றன. போதைப் பொருட்கள் விற்பவர்களை கண்டு பிடித்து காவல்துறை கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். நாகுடி யில் நடைபெறும் இந்த மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.  கவிவர்மன் மற்றும் அறந்தாங்கி சுந்தரம் பேக்கரி நிறுவனத்தார்கள் முகாமில் பங்கு பெற்றனர். மருத்துவ முகாமில் மருத்துவர்கள் பி. கமலக்கண்ணன், சி. கருணாகரன், பழனிவேல்ராஜன், தெட்சிணாமூர்த்தி, ஜெயலட்சுமி, இத்ரீஸ், நிருபன் சக்கரவர்த்தி. ஆசை செல்வன், பாரதிராஜா, ரஞ்சிதா, காசி, கவிதா லெட்சுமி உள்ளிட்டோர் 400-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். மனோ ன்மணி சண்முகம் குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்றனர்.