tamilnadu

img

விளையாட்டு

ஐரோப்பிய சூப்பர் கோப்பை பிரான்ஸ் கிளப் அணி சாம்பியன்

53 ஆண்டுகால பழமையான ஐரோப்பிய சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின், நடப்பாண்டுக்கான சீசனின் இறுதி ஆட்டம் இத்தாலி நாட்டின் உடின் நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் கிளப் அணியான பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியும் - இங்கிலாந்து கிளப் அணியான டோட்டன்ஹாம் அணியும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 90ஆவது நிமிடம் வரை இரு அணிகளும்  2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தன. கூடுதல் நிமிடத்திலும் இரு அணிகளும் மேற்கொண்டு கோலடிக்காத நிலையில், பெனால்டி சூட் அவுட் கடை பிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட் முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணி வெற்றி பெற்று, முதன் முறையாக ஐரோப்பிய சூப்பர் கோப்பையை கைப்பற்றியது.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜுவரேவ் ; பிரிட்ஸ் அவுட்

100 ஆண்டு பழமையான சர்வதேச டென்னிஸ் தொடர்களில் ஒன்றான சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் தொடர்  அமெரிக்காவின் ஓஹியோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலை யில், இந்திய நேரப்படி வியாழக் கிழமை அதிகாலை நடைபெற்ற ஆட வர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவ், தரவரிசையில் 14ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் காச்சா னோவை எதிர்கொண்டார். 7-5, 3-0 என்ற கணக்கில் ஜுவரேவ் முன்னி லையில் இருந்த நிலையில், காயம் காரணமாக  காச்சானோவ் வெளி யேறினார். இதனால் ஜுவரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மேலும் இதே பிரிவில் ஸ்பெயி னின் அல்காரஸ், ரஷ்யாவின் ரப்லவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர். எனினும் தரவரிசை யில் 4ஆவது இடத்தில் உள்ள முன்னணி வீரரான அமெரிக்காவின் பிரிட்ஸ் 6-3, 5-7, 3-6 என்ற செட் கணக்கில், தரவரிசையில் இல்லாத பிரான்சின் அட்மானேவிடம் வீழ்ந்து தொடரில் இருந்து 4ஆவது சுற்றிலேயே வெளியேறினார்.

சபலென்கா அசத்தல்

மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில்  உள்ள பெலாரசின் சபலென்கா, தரவரிசையில் இல்லாத ஸ்பெயினின் ஜெசிக்காவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-1, 7-5 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். ரஷ்யாவின் கலின்ஸ்கியா, கஜகஸ்தானின் ரைபகினா ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னறினர்.