கட்டுமானத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
தருமபுரி, அக்.17- கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பண்டிகை கால போனஸாக ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி சிஐடியு தருமபுரி மாவட்ட கட்டிடத் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம் மனு அளித்தனர். கடந்த செப்.3 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு கட்டு மானத் தொழிலாளர் வாரியக் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பண் டிகை கால போனஸாக தீபாவளிக்கு ரூ.5 ஆயிரம், ஓய்வூ தியமாக ரூ.2 ஆயிரம், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங் கள் வழங்க வாரிய உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கப் பட்டு தமிழக அரசின் ஒப்புதலுக்காக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அருகாமை மாநிலமான புதுச்சேரி யில் நலவாரியம் மூலம் கட்டுமானத் தொழிலாளர்க ளுக்கு போனஸாக ரூ.5 ஆயிரம் மற்றும் 1000 ரூபாய்க் கான டோக்கன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ரூ.6000 கோடிக்கும் மேலாக நலவரிய இருப்பு உள்ள நிலையில், இதுநாள் வரை எந்தவித அறிவிப்பும் இல்லாத நிலையே உள்ளது. பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழக முதல்வர், நல வாரியக் கூட்ட முடிவுகளின் அடிப்படையில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பண்டிகை கால போனஸாக ரூ.5 ஆயிரத்தை, தீபாவளிக்கு முன்னதாக வழங்கி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி கட்டுமானத் தொழி லாளர் சங்கத்தினர் வெள்ளியன்று தருமபுரி ஆட்சியரி டம் மனு அளித்தனர். இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.கலாவதி, மாவட்டத் தலைவர் சி.சண் முகம், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சி.அங்கம் மாள், நிர்வாகி முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
