திருப்பூரில் அரசு பொறியியல் மற்றும் சட்டக்கல்லூரி அமைத்திடுக
வாலிபர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
திருப்பூர், ஜூலை 29- திருப்பூர் மாவட்டத்தில் அரசு பொறி யியல் மற்றும் சட்டக்கல்லூரிகள் அமைக்க வேண்டும் என வாலிபர் சங் கத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட 20 ஆவது மாநாடு திங்களன்று வளைங்காடு வ.உ.சி.நகர் பகுதியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.அருள் தலைமை வகித் தார். வடக்கு மாநகரத் தலைவர் ச. விவேக் வரவேற்றார். மாவட்டச் செய லாளர் கு.பாலமுரளி அறிக்கையை முன் வைத்தார். மாநிலத் தலைவர் எஸ்.கார்த் திக் துவக்கவுரையாற்றினார். மத்தியக் குழு உறுப்பினர் செல்வராஜ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பானு மதி, மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், திருப்பூரில் அரசு பொறியியல் மற்றும் சட்டக்கல்லூரிகள் அமைக்க வேண் டும். இளைஞர்களுக்கான ஒருங்கி ணைந்த விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டும். பல்லடம், மாணிக் கபுரம் பகுதியில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் பேராசிரியர் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். மலை போல் தேங்கி கிடக்கும் குப்பை பிரச்ச னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவராக க.நிரு பன் சக்கரவர்த்தி, செயலாளராக கு. பாலமுரளி, பொருளாளராக க.சிந்தன், துணைத்தலைவர்களாக அ.சந்தோஷ், எஸ்.விவேக், துணைச்செயலாளர்க ளாக ஆர்.சுதா, எஸ்.பிரவீன் உட்பட 25 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் நிறை வுரையாற்றினார்.