tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

அன்பால் அரவணைத்த இங்கிலாந்து தமிழர்கள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி  

சென்னை: ஜெர்மனி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இங்கிலாந்து சென்ற தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக மான வரவேற்பு அளித்துள்ளனர். ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்ட முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் இங்கிலாந்து நாட்டின் தலைநகர்  லண்டனுக்கு சென்றார். விமான நிலையத்தில் திரண்டிருந்த இங்கிலாந்து வாழ் தமிழர்கள் பலர், முதல்வர் மு.க. ஸ்டாலி னுக்கு பூங்கொத்துக்களை வழங்கி வரவேற்பு அளித்தனர். மேலும் அவர்களுடன் செல்பி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.  இது குறித்து தமது ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் பதி விட்டுள்ள முதலமைச்சர், “இங்கிலாந்தில் கால் வைத்த தும் தமிழர்களின் அன்பாலும் பாசத்தாலும் அரவணைக்கப் பட்டேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ‘டிஎன் ரைஸிங்’ (TN Rising) முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனி யில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 26  நிறுவனங்களுடன் ரூபாய் 7,020 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக வும், இதன் மூலம் 15,320 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கள் உருவாக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித் துள்ளது.

தமிழ்நாட்டில் பரவுவது  வைரஸ் தொற்று இல்லை சுகாதாரத் துறை விளக்கம்

சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு  பகுதிகளில் பரவி வருவது வழக்கமான ‘இன்ஃப்ளூயன்சா ஏ’  வகை வைரஸ் காய்ச்சல் மட்டுமே என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.  காலநிலை மாற்றம் மற்றும் மழைப் பாதிப்பு போன்ற  காரணங்களால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டின்  பல்வேறு பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித் துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை களில் சளி, இருமல், தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறி களுடன் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி காய்ச்சலின் தன்மையை கண்டறியுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாதிரிகள் பரிசோதனை முடிவில் புதிய வகை வைரஸ் தொற்று காணப்பட்டால் அதற்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆனால், தமிழ்நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50  சதவிகித நோயாளிகளுக்கு இன்ஃப்ளூயன்சா ஏ வகை  பாதிப்பு மட்டுமே உள்ளது என்பது ஆய்வுகளில் தெரியவந்து உள்ளது. ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இரு மடங்கு அதிகரித்தது வழக்கமான ஒன்று என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை வீட்டைச் சுற்றி யுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளு மாறு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி  குறைவாக உள்ளவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்க ளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், திருமணம்,  கோவில் நிகழ்ச்சிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலை யங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்  போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு சுகாதாரத்துறை

கேட்டுக் கொண்டுள்ளது. 300 பணியிடங்களை நிரப்ப முடிவு

சென்னை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர்,  அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்கள் காலி யாக உள்ளன. இப்பணிகளுக்கு www.tnrd.gov.in என்கிற  இணையதளத்தில் செப்.30ஆம் தேதிக்குள் ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம். குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்த வர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

6 அணைகளை மேம்படுத்த முடிவு

சென்னை: தமிழ்நாட் டில் 6 அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம் படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ் நாடு அரசு முடிவு செய்து உள்ளது. அமராவதி, ஆழி யாறு, பவானிசாகர், மேட்டூர், வைகை அணை களில் சுற்றுலா வசதி களை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. சுற்றுலாத் துறையில் அதிக முதலீடு களை ஈர்க்கவும் தொழில் நிறுவனங்களை ஊக்கு விக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

சஸ்பெண்ட் உத்தரவு ரத்து  

சென்னை: ஸ்ரீபெரும் புதூரில் ஒன்றிய அரசின் கீழ் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம் பாட்டு நிறுவனத்தில் 2- ஆம் ஆண்டு மாண வர்கள் மூவர், கல்லூரி  விடுதியின் சுவரில் ‘ஜெய் பீம், சுதந்திர பாலஸ்தீனம்’ என எழுதியதாகக் கூறி  சஸ்பெண்ட் செய்யப்பட்ட னர். இதற்கு எதிராக மாண வர்கள் மூவரும் உயர்  நீதிமன்றத்தில் தனித் தனியே முறையீடு செய்த னர். இந்த வழக்கை விசா ரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், மாண வர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜிப்மருக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு செப்டம்பர் 22 வரை  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் பி.எஸ்சி. படிப்புக்கு மாணவர்கள்  சேர்க்கை நடைபெறுகிறது.

அரிய வகை புல்சா மீன்கள்

புதுச்சேரி: ஏனாமில் மீனவரின் வலையில் அரியவகை புல்சா மீன்கள் சிக்கி உள்ளன. அதிக சுவை, சத்து கொண்ட புல்சா மீன்கள்,  கடலில் இருந்து இனப் பெருக்கத்துக்கு ஆற் றுக்கு வரும்போது சிக்கு கின்றன. மீனவர் வலை யில் பிடிபட்ட புல்சா மீன்கள்  அதிக அளவாக ரூ.29,000- க்கு ஏலம் போனது.