tamilnadu

img

மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கை

மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும்  நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்

 மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கை

பெரம்பலூர், ஆக. 19-  தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், பெரம்பலூர் வட்டக்கிளை 10 ஆவது மாவட்ட மாநாடு, பெரம்பலூர் சிஐடியு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சம்பத் தலைமை வகித்தார். வட்ட துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்றினார். வட்ட துணைத் தலைவர் கருணாநிதி சங்கத்தின் கொடியை ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மூத்த தலைவர் முத்துசாமி வாசித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஜி.பஷீர் தொடக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் இராஜகுமாரன் மற்றும் நிதிநிலை அறிக்கையை மாவட்ட பொருளாளர் கண்ணையன் வாசித்தனர். மாநிலச் செயலாளர் கோவிந்தராஜு, சிஐடியு ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் செல்வராஜ் நிறைவுரையாற்றினார். வட்ட துணைச் செயலாளர் ஜெயபால் நன்றி தெரிவித்தார். ஒன்றிய, மாநில அரசுகள் பொதுத்துறைகள் பொதுத் துறைகளாகவே நீடிக்கச் செய்ய வேண்டும். மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமலாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவராக டி. எஸ்.சம்பத், மாவட்டச் செயலாளராக ரெ. இராஜகுமாரன், பொருளாளராக சி.கண்ணையன் மற்றும் துணைத் தலைவர்களாக ஆறு பேர், இணைச் செயலாளர்களாக ஆறு பேர் என 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மரம்  வளர்ப்போம்!   சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!