tamilnadu

img

மதுரையில் மூட்டா எட்டாவது கல்வி மாநாடு ‘இந்தியக் கல்வியில் அரசியல் அமைப்புச் சட்ட விழுமியங்களைப் பாதுகாப்போம்’

மதுரையில் மூட்டா எட்டாவது கல்வி மாநாடு ‘இந்தியக் கல்வியில் அரசியல் அமைப்புச் சட்ட விழுமியங்களைப் பாதுகாப்போம்’

மதுரை, அக்.11- தமிழ்நாடு மாநில ஆசிரியர் அமைப்பான மூட்டா சார்பில் “இந்தியக் கல்வியில் அரசியல் அமைப்புச் சட்ட விழுமியங்களைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் மூட்டாவின் எட்டாவது கல்வி மாநாடு சனிக்கிழமை மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் சிறப் பாக நடைபெற்றது. மாநாட்டில் மூட்டா பொருளா ளர் ஆர். ராஜஜெயசேகர் வரவேற்  புரை ஆற்றினார். மூட்டா தலை வர் பி.கே.பெரியசாமி ராஜா  தலைமை வகித்தார். பொதுச்செய லாளர் ஏ.டி. செந்தாமரைக்கண் ணன் தொடக்க உரை ஆற்றினார். அமெரிக்கன் கல்லூரி முதல்வர் பால் ஜெயகர் வாழ்த்துரை வழங்கி னார். முக்கிய கருத்துரைகளை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்  மற்றும் கல்வியாளர் நிலோத்பால் பாசு மற்றும் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மேனாள் மாநில தலை வர் பேரா. அருணன் ஆகியோர் வழங்கினர். மூட்டா தலைவர் முனைவர் எம் .நாகராஜன் கலந்து கொண்டு கருத்து பகிர்ந்தார். நன்றியுரை மாநாட்டு அமைப்  புச் செயலாளர் பேரா.ஜே. இராபர்ட் திலீபன் வழங்கினார். மாநாட்டின் போது மொத்தம் 14 முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அவற்றில் சில முக்கியமானவை: தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்பட வேண்டும்; கல்வி மாநில உரிமையாக நிலை நிறுத்தப்பட வேண்டும். அரசு பள்ளி களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும்; புதிய பள்ளிகள் தொடங்கி மாணவர் சேர்க்கை ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பு தல், பதவி உயர்வு நிலுவைகள் வழங்குதல், ஓய்வூதிய தாம தங்களை நீக்குதல் ஆகிய நலத்  திட்டங்கள் விரைவில் செயல்படுத் தப்பட வேண்டும். பெண் ஆசிரியர்கள் மற்றும் மாணவியருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், மாதவிடாய் விடுப்பு, குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட  கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. மேலும், இந்திய கல்வி வர லாற்றை வடக்கு–தெற்கு பார்வை யில் விளக்கும் சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதில் சமண–பௌத்த மரபுகள், குருகுல கல்வி முறை, 1813 கல்வி சாசனம், 1913இல் சாதி–மத  வேறுபாடுகளை கடந்த கல்வி வளர்ச்சி, பிரிட்டிஷ் ஆட்சிக்கால கல்வி முறை மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கல்வி யை வணிகமாக்கிய தற்போதைய சூழ்நிலைகள் குறித்து ஆவ ணங்கள், புகைப்படங்கள், விளக்  கங்கள் ஆகியவை இடம் பெற்றி ருந்தன.