tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடி:  விரைவாக விசாரிக்க உத்தரவு

சென்னை: போலி இன்சூரன்ஸ் மோசடி குறித்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில்  ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், போலி இன்சூரன்ஸ் மோசடி குறித்து சிறப்பு புலனாய்வு குழு  விசாரணை நடத்த தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி, தமிழகம் முழுவதும் 105 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக 467 புகார்கள் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று  குறிப்பிட்டார். எனவே இந்த புகார்கள் மீது உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அந்த வழக்கை உடனடி யாக விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி  உத்தரவிட்டார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.அய்யாவு மறைவுக்கு இரங்கல்

சென்னை, செப்.20 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்  ஏ.அய்யாவு மறைவுக்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினராகவும், ஈரோடு மாவட்டத் தலைவ ராகவும், செயலாளராகவும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை சங்க செயலாளராகவும் செயல்பட்டு வந்த தோழர் ஏ.அய்யாவு, சாலை  விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனை யில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக் கிழமை மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த  வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஈரோடு மாவட்ட விவசாயிகளின் பல பிரச்ச னைகளுக்கு தீர்வு காண்பதற்காக உறுதியான போராட்டங்களை முன்னெடுத்தவர் தோழர்  ஏ.அய்யாவு. அவருடைய மறைவு விவசாயிகள்  இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரை பிரிந்து  வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனு தாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு சார்பில் வீரவணக்கம் செலுத்து கிறோம்” என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் திடீர் ஒத்திவைப்பு

சென்னை: செப்.20, 21 தேதிகளில் நடைபெற இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அதிமுக  தலைமை கழகம் வெள்ளி யன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக் கூடும் என்று அறிவித்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி செப்.21 அன்று நாமக்கல்  மாவட்டத்தில் மேற் கொள்ள இருந்த சுற்றுப் பயணம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. இதற்கு பதில் அக்.4, 5 ஆம் தேதி களில் நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய  சட்டமன்றத் தொகுதி களில் சுற்றுப் பயணம் நடைபெறும்” என தெரி விக்கப்பட்டுள்ளது.