அமெரிக்காவின் சுங்க மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது! சிஐடியு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக. 13 - அமெரிக்காவின் சுங்க மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது. இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுத் துறைகளையும், பொது சேவைகளையும் தனியாரிடம் தாரை வார்க்கக் கூடாது. அனைத்து ஒப்பந்தங்களையும் நாடாளுமன்றத்தில் வைத்து பொது மக்களின் ஆலோசனைப்படி நிறை வேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் தென்னூர் அரச மரத்தடி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் சிஐடியு ரெங்கராஜன், எல்.பி.எப். ஜோசப் நெல்சன், ஏஐடியுசி சுரேஷ், ஏஐசிசிடியு ஞான தேசிகன், எல்.எல்.எப் தெய்வீகன், யுடியுசி சிவ செல்வம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கார்த்திகேயன் ஆகியோர் பேசினர். தஞ்சாவூர் தஞ்சாவூர் தலைமை தபால் நிலை யம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஐக்கிய விவசாயி கள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் என்.வி.கண்ணன், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர் ஆகி யோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் என். மோகன்ராஜ், ஏஐசிசிடி மாவட்டத் தலை வர் கே.ராஜன், எச்.எம்.எஸ் மாவட்டச் செயலாளர் சின்னப்பன், யுடியுசி மாவட்டச் செயலாளர் ராஜாராமன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வா கிகள் காளியப்பன், பி.செந்தில்குமார், சோ.பாஸ்கர், பி.கோவிந்தராஜன், முகமது இப்ராஹிம், ஆர்.ராமச்சந்தி ரன், இரா.அருணாசலம், புண்ணிய மூர்த்தி பங்கேற்றனர்.