tamilnadu

img

அதற்குப் பின்னிருக்கும் அயோக்கியத்தனம் புரிகிறதா?

அதற்குப் பின்னிருக்கும் அயோக்கியத்தனம் புரிகிறதா

சம்பவம்

2012இல், அந்த காவல் துறை அதிகாரி, திருநெல்வேலி எஸ்பியாக பணியில் இருக்கிறார்.  அப்போது அவரது பார்வைக்கு ஒரு குற்ற வழக்கு வருகிறது.  தன் கணவனையே கொலை செய்த குற்றத்திற்காக ஒரு பெண்ணை கைது செய்து அவர் முன் நிறுத்துகிறார்கள். அந்த பெண் நடுங்கிக் கொண்டு ஒரு  கோழிக்குஞ்சைப் போல் அமர்ந்திருக் கிறார்.  ‘சொந்த கணவனையே ஏன் கொலை செய்தாய்’ என்று கேட்டபோது, வெடித்து அழுகிறார். விசும்பல்களூடே அவர் சொன்ன செய்தி இதுதான். சம்பவம் நடந்த அன்று அவரது கணவர் முழு  போதையில் வீட்டிற்கு வந்து, தன்னை, வயது வந்த அவர்களது மகளின் முன்னாலேயே உடலுறவுக்கு அழைத்த தாகவும், தான் மறுத்ததால், தன்னை விட்டுவிட்டு, பெற்ற மகளையே வன்பு ணர்வு செய்ய முயன்றதாகவும், அத னால் தனக்கு வேறு வழியில்லாமல் கிரிக் கெட் மட்டையை எடுத்து கணவனின் தலையில் அடித்ததாகவும் கூறி முடித் திருக்கிறார். இந்த தகவல்களை முழுமையாக சரிபார்த்த காவல் அதிகாரி, தன் கண வன், தன் மகளையே பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்தும் அவலத்தை உணர்ந்து, இது மகளைப் பாதுகாக்க ஒரு தாய் எடுத்த தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து, ஐபிசி 100 சட்டப்பிரி வை உபயோகப்படுத்தி, அந்த நிமிடமே அந்தப் பெண்ணை விடுதலை செய்தார்.  இது மிகத் துணிவான நடவடிக்கை என்று அனைவராலும் அன்று பாராட்டப் பட்டது.

சம்பவம் 2

2002 குஜராத் கலவ ரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற 21 வயது நிரம்பிய பெண், தன் 3 வயது மகள் மற்றும் 20 உறவினர்களுடன், கலவரக்காரர் களிடமிருந்து தப்பிக்கத் தன் ஊரை விட்டு வெளியேறுகிறார்.  அவர் ஐந்து மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்.  அவர்கள் சப்பர்வாட் என்ற இடத்தில் இருக்கும்போது, 20 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை முற்றுகையிடுகிறது.  அங்கிருந்த ஆண்களை எல்லாம் அங்கேயே கொன்று வீசிவிட்டு, பெண் கள் அனைவரையும் வன்புணர்வு செய்து  கொல்கின்றனர்.  கடைசியாக அவர்கள் பில்கிஸ் பானு விடம் வரும்போது, தான் கர்ப்பிணியாக இருப்பதால் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார்.  அப்போதும் மனமிரங்காத வெறிக் கும்பல், அங்கேயே அவரையும் கொடூர மாக வன்புணர்வு செய்கின்றனர்.  அப்போது மூன்று வயது குழந்தை இடையூறாக அழுததால், இரண்டு கால்களையும் பிடித்து தூக்கி, சிதறு தேங்காய் போடுவதுபோல் பாறையில் தலையை அடித்து கொன்றனர்.  இதைக் கண்டு மயங்கிய பெண்ணை,  இறந்துவிட்டார் என்று விட்டுவிட்டு ஓடிவிட்டனர். பல்லாண்டு கால தீவிர சட்டப் போரா ட்டத்திற்குப் பின் இதில் சம்பந்தப்பட்ட பதினொரு பேருக்கு ஆயுள் சிறை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.  2022இல் இந்தக் கும்பல், தங்களது  தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறை யிட்டது.  இதை விசாரித்த நீதிபதி, அந்த முறையீட்டை அப்படியே ஏற்று, அவர்கள் தண்டனையைக் குறைக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிடுகிறார். அந்த உத்த ரவை ஏற்று அவர்கள் அனைவரும் விடு தலை செய்யப்பட்டனர். 

பின், பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது வரலாறு. சம்பவம் 1இல் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியின் பெயர் அஸ்ரா கார்க். அவர் தலைமையில் தான், கரூர் நெரிசல் மரணங்களை ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்தது சென்னை உயர்நீதிமன்றம். சம்பவம் 2இல், கொடூர வன்புணர்வா ளர்களின் தண்டனையைக் குறைக்கச் சொல்லி உத்தரவிட்ட நீதிபதியின் பெயர் அஜாய் ரஸ்தோகி.  கரூர் நெரிசல் மரணங்களை ஆய்வு  செய்யும் சிபிஐ குழுவை மேற்பார்வை செய்ய அவரைத் தான் உச்சநீதிமன்றம் நியமித்திருக்கிறது. இப்போது சொல்லுங்கள், உச்சநீதி மன்றத் தீர்ப்பினால் நன்மை நடக்கும் என்று நினைக்கிறீர்களா? இந்தத் தீர்ப்புக்குப் பின், விஜய் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் “நீதி வெல்லும்” என்று கூசாமல் கூக்குர லிடுகிறார்களே, அதற்குப் பின்னி ருக்கும் அயோக்கியத்தனம் புரிகிறதா?