பாஜகவின் மிரட்டலுக்கு திமுக அரசு அஞ்சாது! கரூர் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
கரூர், செப். 17 - ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு விளைவிப்பதாக, திமுக-வின் 75-வது முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார். அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு செப்.17 அன்று கரூர் கோடங்கிப்பட்டியில் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, “காவிக் கொள்கையின் அரசியல் முகம் பாஜக. அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான். பாஜகவின் கைப்பாவை ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்ததால் திமுக அரசு மீது வன்மத்துடன் செயல்படுகிறது ஒன்றிய அரசு” என்று தெரிவித்தார். பாஜக - அதிமுகவின் எந்த மிரட்ட லுக்கும் திமுக அஞ்சாது என்று உறுதியளித்த முதலமைச்சர், “நாடே திரும்பிப் பார்க்கும் திமுக ஆட்சியை உருவாக்கி என்னை முத லமைச்சராக்கியது மக்கள்தான். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று, திமுக மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமை யும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த விழாவில், கனிமொழி எம்.பிக்கு பெரியார் விருது, சுப. சீத்தாராமனுக்கு அண்ணா விருது, சோ.மா. இராமச்சந்தி ரனுக்கு கலைஞர் விருது, குளித்தலை சிவ ராமனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, மருதூர் இராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருது, பொங்கலூர் நா. பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட முரசொலி செல்வம் விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வ னுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக கரூர் மாவட்டச் செயலாளர் வி.செந்தில் பாலாஜி வரவேற்று பேசினார். முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டா லின், நிர்வாகிகள் ஐ. பெரியசாமி, திருச்சி என்.சிவா, ஆ. ராசா, அந்தியூர் ப. செல்வ ராஜ், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர். முன்னதாக, பெரியாரின் 147 ஆவது பிறந்த தினத்தையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். (ந.நி.)