தீபாவளி பண்டிகை: காவல் உதவி மையங்கள் திறப்பு
தஞ்சாவூர், அக்.15 - தீபாவளி பண்டிகைக்காக, தஞ்சாவூர் காந்திஜி சாலையில் காவல் உதவி மையத்தை மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் இரா.ராஜாராம் செவ்வாயன்று திறந்து வைத்தார். தீபாவளி பண்டிகை அக். 20 ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. இதற்காக பொது மக்கள் புதிய ஆடைகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்குவ தற்கு கடைத்தெருக்களில் குவிந்து வருகின்றனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலை யத்தை சுற்றி அதிகளவில் வர்த்தக நிறு வனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இனிப்பகம், நகைக்கடைகள், ஜவுளிக் கடைகள் என ஏராளமாக உள்ளன. சாதா ரண நாட்களில், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இப்பகுதிகளில் மக்கள் நெருக்கடி அதிக அளவில் இருக்கும். பொது மக்கள் பாதுகாப்பிற்காக காந்திஜி சாலை, மணிக்கூண்டு அருகில் காவல் உதவி மையத்தை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் இரா.ராஜாராம் திங்கள் கிழமை திறந்து வைத்தார். தஞ்சை நகரின் அனைத்துப் பகுதி யிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 800 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன. நகர காவல் துணைக் கண்கா ணிப்பாளர் சோமசுந்தரம், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கலை வாணி, போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் எம்.ஜி.ரவிச் சந்திரன் மற்றும் காவல்துறை யினர் கலந்து கொண்டனர். கும்பகோணம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரடி வீதியில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக காவல் உதவி மையத்தை கும்பகோணம் காவல் கண்கா ணிப்பாளர் ராஜாராம் திறந்து வைத்தார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்க ளான தஞ்சை சாலை, மகாமகக் குளம், காந்திபார்க், மடத்துத் தெரு, புதிய பேருந்து நிலையம், உச்சிபிள்ளையார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 40 கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டு காவல் உதவி மையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
