கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவில் உதை வண்டி போட்டி
கும்பகோணம், ஜூலை 5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான கிக் ரைடர் (உதை வண்டி) போட்டி நடைபெற்றது. இப்போட்டி ஆறு பிரிவுகளாக வயதின் அடிப்படையில் நடை பெற்றது. இப்போட்டியில் கும்பகோ ணம் பகுதியைச் சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியை பள்ளி தலை வர் கார்த்திகேயன் துவக்கி வைத்து, மாணவ-மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சிறப்பாக விளையாடி முதல் மூன்று இடம் பிடித்த மாணவ-மாண வியர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.