மணவாளக்குறிச்சியில் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
நாகர்கோவில், அக். 4- மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி வாளகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகா மினை மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மணவாளக்குறிச்சி, வெள்ளிமலை, மண்டைக்காடு, கல்லுக்கூட்டம், ரீத்தாபுரம், திங்கள்நகர், நெய்யூர், வில்லுகுறி ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்க ளுக்கும், முட்டம், வெள்ளிச்சந்தை, சைமன் காலனி, ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்க ளுக்கும், குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பொது மக்களுக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் – ஒன்பதாம் கட்ட மருத்துவ முகாம் மணவா ளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா துவக்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், குமரி மாவட்டத்தில் இதுவரை 8 முகாம்கள் நடை பெற்றுள்ளன. அதில் 4367 ஆண்களும், 10419 பெண்களும் என மொத்தம் 14,786 பயனாளிகள் பயன்பெற்றுள்ளார்கள். மருத்துவர்கள் பரிசோதனை செய்து தேவை யான மருந்து மாத்திரைகள் வழங்கி, மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்து எக்கோ போன்ற உயர் பரிசோதனை களும் செய்து வருகின்றார்கள். உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, தொ டர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்ற னர். நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்க ளில் பரிசோதனை மேற்கொள்ளும் பொது மக்களுக்கு முகாம்களில் பரிசோதிக்கப்படும் ஆய்வக சோதனைகளின் முடிவுகள் அன்றைய தினமே வழங்கப்படுகிறது. தொடர்ந்து டோக்கன் வழங்கும் பகுதிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அதிக கவுன்ட்டர்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும், முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான இருக்கை வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமெனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார். இந்த முகாமில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.சகாய ஸ்டீபன் ராஜ், பாபுஜி நினைவு மேல் நிலைப்பள்ளி தாளாளர் முனைவர் நஸ்ரேத் சார்லஸ், துறை அலுவலர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
