வன உயிரினங்களை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு இன்றியமையாதது
மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பேச்சு
நாகர்கோவில்,அக்.9- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் வனஉயிரின வார விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மனிதன் - வனவிலங்கு இணைந்த வாழ்வியல் குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசு மற்றும் சான்றி தழ்கள் வழங்கும் நிகழ்ச்சி க்கு மாவட்ட வன அலுவலர்- வன உயிரின காப்பாளர் முனைவர் அன்பு முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலை வர் அழகுமீனா மாணவர்க ளுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்ட மானது இயற்கை வளம் நிறைந்த மாவட்டமாகும். மாணவர்களாகிய நீங்கள் வனப்பகுதியை பாதுகாப்ப தற்கு முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும். எத்த னை பேர் வனப்பகுதிக்கு சென்று வனப்பகுதியை பார்வையிட்டு உள்ளீர்கள். குமரி மாவட்டத்தில் பேச்சிப் பாறை, பெருஞ்சாணி, கோதையாறு மோதிரமலை உள்ளிட்ட பல்வேறு வனப் பகுதிகள் உள்ளன. நீங்கள் இரண்டு மணி நேரம் பயணம் மேற்கொண்டாலே நம்மால் அந்த வனப்பகுதியை பார்வை யிட முடியும். முடிந்த அள விற்கு வனப்பகுதிக்கு சென்று, அங்குள்ள செடி, கொடிகள், மரங்கள் அங்கு வசிக்கும் மக்களை பார்வையிடும் போது தான் நாம் வனப்பகுதியை பாது காக்க வேண்டும் என்ற எண் ணம் வரும். எனவே நீங்கள் வனப்பகுதிக்கு சென்று மனிதனுடன் வனவிலங்கு இணைந்த வாழ்க்கையினை தெரிந்துகொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் வனத்துறை, தோட்டக்க லைத்துறை, ஊரக உள்ளாட்சி துறை, வட்டார வளர்ச்சி அலுவலங்கள் உள்ளிட்டவைகளின் கீழ் சுமார் 19 நர்சரிகள் உள்ளன .அங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரம் செடி கொடிகள் வளர்க்கப்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடப்பட்டு வருகிறது. மாணவர்க ளாகிய நீங்கள் மரக்கன்று களை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இது ஒவ்வொரு மாணவ மாணவியர்களின் கடமை யாகும். வனஉயிரினங்களை பாதுகாத்திடுவதில் மாணவ மாணவியர்களின் பங்கு இன்றியமையாதது. இவ்வாறு ஆட்சியர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி வன பாதுகா வலர் ஸ்ரீவல்சன், வனச்சர கர்கள் ,வனவர்கள், வணப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவி யர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
