அறந்தாங்கியில் மாவட்ட, மாநில அளவிலான ஆணழகன் போட்டி
அறந்தாங்கி, ஜூலை 28- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அறந்தாங்கி எஸ்.எம். ஜிம் ஃபிட்னஸ் மற்றும் இந்தியன் ஃபிட்னஸ் ஃபெடரேஷன் இணைந்து நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஆணழகன் போட்டியினை, கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி, வாழ்த்திப் பேசினார் இந்த ஆணழகன் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300 இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, தங்களது உடற்கட்டுகளை வெளிப்படுத்தினர். மாநில அளவில் நடைபெற்ற போட்டியில், முதல் பரிசை திருச்செந்தூரைச் சேர்ந்த சிவபாலன் வென்றார். பாண்டிச்சேரியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் இரண்டாம் பரிசை வென்றார். ஓவர் ஆல் ரொக்க பரிசினை அறத்தாங்கி திமுக நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜே.எஸ். அய்யப்பன் வழங்கினார். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை தமிழ்நாடு மிஸ்டர் சாம்பியன் மணிகண்டன் செய்திருந்தார்.