tamilnadu

அனைத்து சங்க பிரதிநிதிகளுடன் விவாதித்து அரசுக்கு அளித்த பரிந்துரையை நிறைவேற்றுக!

அனைத்து சங்க பிரதிநிதிகளுடன் விவாதித்து அரசுக்கு அளித்த பரிந்துரையை நிறைவேற்றுக!

புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஆக.24 - தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை திருச்சியில் மாநிலத் தலைவர் ஜே.பால் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் பி.முரு கேசன் வரவேற்றார். வேலை அறிக் கையை பொதுச் செயலாளர் இரா.ரமேஷ் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை மாநில பொருளாளர் சீ.அண்ணாமலை சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நவநீதன் துவக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் பால்பாண்டி வாழ்த்துரை வழங்கினார்.  கூட்டத்தில், முன்னாள் தலைமை  செயலாளரான முனைவர் இறை யன்பு ஆணையராக இருந்த போது,  அனைத்து சங்க பிரதிநிதிகளுடன் விவாதித்து அரசுக்கு அளித்த பரிந் துரையை நிறைவேற்ற வேண்டும். ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் டாக்டர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மறு  சீரமைக்கப்பட்ட துறையின் தொழில் நுட்ப பணியிடங்களை குறைப்பதை தவிர்க்க வேண்டும். பல்வேறு கணக்கெடுப்புகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், புதிய பணியிடங்கள் வழங்காமல் இருக்கும் தொழில்நுட்ப பணியிடங் களை குறைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்கள், கோட்டங்கள் மற்றும்  வட்டாரங்களுக்கு புள்ளி இயல் துறை அலுவலகங்களை உடனே தோற்றுவிக்க வேண்டும். ஒவ்வொரு  முறையும் தாமதமாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வரும் புள்ளியியல் உதவி இயக்குநர் மற்றும் புள்ளி யியல் அலுவலர் பதவி உயர்வுகளை  மேலும் தாமதமின்றி வழங்க வேண்டும். அனைவருக்கும் பழைய  ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த  வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி  பணியாளர்கள் உள்ளிட்ட தொகுப் பூதிய பணியாளர்கள் அனைவரை யும் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், ரமேஷ் குமார், பாலசுப்பிரமணியம் உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்ட னர். மாநிலச் செயலாளர் இமயவர்மன்  நன்றி கூறினார்.