tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் தொழிலாளர்களுக்கு ஊதியம் இல்லை  தேசிய பஞ்சாலை நிர்வாகத்தின் வஞ்சகம் – ஆட்சியரிடம் கண்ணீர்

கோவை, ஆக. 12 – 42 ஆண்டு காலமாக போராடி, நீதி மன்றம் தீர்ப்பளித்தும் தொழிலாளர் களுக்கு சேரவேண்டிய ஊதியத்தை வழங்காமல் இருக்கும் என்டிசி பஞ் சாலை நிர்வாகத்தின் வஞ்சகத்திற்கு இரையான தொழிலாளர்கள், கண் ணீர் மல்க கோவை ஆட்சியரிடம் முறை யிட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த  1982 இல் மூடப்பட்ட சோமசுந்தரம் மில்ஸ்  நிறுவனத்தின் 12 தொழிலாளர்கள், தங்க ளுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலு வைத் தொகை மற்றும் பணப்பலன் களைக் கேட்டு கடந்த 42 ஆண்டுக ளாகப் போராடி வருகின்றனர். நீதிமன் றங்கள் பலமுறை அவர்களுக்குச் சாதக மாகத் தீர்ப்பளித்தும், தமிழ்நாடு பஞ் சாலைக் கழகம் (Tamilnadu Textile  Corporation) பணத்தைக் கொடுக்கா மல் இழுத்தடித்து வருகிறது.  வழக்கின் பின்னணி: 1982-ஆம் ஆண்டு அரசின் அனுமதி  பெறாமல் மூடப்பட்ட சோமசுந்தரம் மில்ஸ், விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர் களுக்குப் பணப்பலன்களை வழங்கி யது. ஆனால், வேலைவாய்ப்பு அலுவ லகம் மூலம் பணியில் சேர்ந்த 12 தொழி லாளர்களுக்கு மாற்று வேலை வழங்கா மலும், அவர்களுக்கான ஊதிய நிலு வைத் தொகையையும், பணப்பலன் களையும் கொடுக்காமலும் இருந்துள் ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தொழிலாளர்களுக்குச் சாதக மாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால்,  நிர்வாகம் தொடர்ந்து பணப்பலன்களை வழங்க மறுத்ததால், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. கடந்த ஜூலை மாதம் உச்ச நீதி மன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய தொகையில் 75 சதவீதத்தை வழங்க நிர் வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால், இது வரை ரூ.3 கோடிக்கும் அதிகமான தொகையை வழங்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால்  விரக்தியடைந்த தொழிலாளர்கள், தமிழ் நாடு பஞ்சாலைக் கழகத்தின் தலைமை  அலுவலகம் கோவையில் அமைந்துள்ள தால், அங்கு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி னர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலா ளர்கள் கூறுகையில், “42 ஆண்டுகளாக எங்கள் வாழ்நாளை நீதிமன்றப் போராட்டத்திலேயே கழித்துவிட்டோம். பல தொழிலாளர்கள் இந்தப் பணத் தைப் பெறாமலேயே இறந்துவிட்டனர். இப்போது கிடைத்துள்ள தீர்ப்பையும் நிர்வாகம் மதிக்க மறுக்கிறது. உடனடி யாக தமிழக அரசு இதில் தலையிட்டு, எங்களுக்குச் சேர வேண்டிய பணப் பலன்களைப் பெற்றுத் தர வேண்டும்” என்று கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தனர்.

சட்டவிரோத கிரையம் - துணை போகும் அதிகாரிகள்: வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார்

நாமக்கல், ஆக.12- போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை கிரையம் செய்த  நபர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி வட்டாட்சியர் அலு வலகத்தில் பொதுமக்கள் புகாரளித்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வேமங்காட்டுவலசு பகுதியில் சுமார் 7 நபர்களுக்கு சேர்ந்த விவசாய நிலத்தை தனிநபர், வருவாய்த்துறையினரிடம் போலி ஆவணங்களை பெற்று தனது பெயரில் கிரையம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நில உரி மையாளர்கள் குமாரபாளையம் சார்பதிவாளரிடம் கேட்ட  பொழுது, வருவாய்த்துறையினர் கொடுத்த சான்று அடிப் படையிலேயே தான் கிரையம் செய்ததாக கூறியதையடுத்து,  மாவட்ட பதிவாளரிடம் முறையிட்டனர். அப்போது மாவட்ட பதிவாளர் வருவாய்த்துறை சான்று கொண்டு கிரையம் செய் தது தவறு என்று கூறியதுடன், மேல் நடவடிக்கை எதுவும் எடுக் கவில்லை. மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சி யர் ஆகியோரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், திங்களன்று பொது மக்கள் ஒன்று திரண்டு குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் மனு ஒன்றை வழங்கினர். அப்போது, வட்டாட்சியர்  வழங்கிய ஒப்புகை கடிதத்தை திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்த னர். இதையடுத்து இரு தரப்பினையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.