tamilnadu

img

வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

விருதுநகர், செப்.23- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி  ஸ்டாலின் பங்கேற்றார்.   விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், திருச்சுழி, அருப்புக் கோட்டை ஆகிய 7 சட்டமன்ற தொகுதி களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், பயனாளிகள் விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற் கொண்டார். குறிப்பாக, பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பது மற்றும் அதற்கான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது, இத்தொழிலில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்களின் பாது காப்பு தொடர்பாகவும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இக்கூட்டத்திற்கு பின் செய்தி யாளர்களை சந்தித்த துணை முதல் வர் கூறுகையில், விருதுநகர் மாவட்ட த்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினோம். அதில் சாலைப் பணிகள், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் முகாம் களில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நட வடிக்கை குறித்தும் ஆய்வு செய்தோம். திட்டப்பணிகளை பொறுத்தவரை 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீத முள்ள பணிகளை, அதில் உள்ள குறைகளைக் களைந்து காலதாமத மின்றி விரைந்து முடிக்க வேண்டு மென்று உத்தரவிட்டுள்ளேன். விருது நகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் உள் விளையாட்டு அரங்கங்களுக்கான  முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்துள் ளன. மேலும் அனைத்து திட்ட பணி களையும் ஆய்வு செய்ததில் திருப்தி கரமாக உள்ளது என தெரிவித்தார். இந்த ஆய்வில், நிதி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் சீனிவாசன், அசோகன், தங்கப்பாண்டி, சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்பு, மருத்துவக் கல்லூரி கலை யரங்கில் 837 பேருக்கு ரூ.10 கோடியே 84 லட்சத்து 24 ஆயிரத்து 129 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.124.57 கோடி மதிப் பீட்டில்  9 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, ரூ. 25.89 கோடியில் முடிவுற்ற 5 பணிகளையும் துவக்கி வைத்தார்.