துணை முதலமைச்சர் உதயநிதி பாதிப்பு பகுதியில் நேரடி ஆய்வு!
சென்னை, அக். 22 - சென்னைக்கு, புதன்கிழமையன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத் தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களைக் கேட்டறிந்து உரிய நடவ டிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சமூக ஊடகங்களில் வரப்பெற்ற புகார்கள் குறித்தும் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித் தும் விரிவாக ஆய்வு செய்தார். தேனாம்பேட்டை மண்டலம் நுங்கம் பாக்கம் வார்டு நூற்று பதினொன்றில் ஜெய்சங்கர் பாதை பகுதியில் இருந்து நிதின் என்பவரிடம் வரப்பெற்ற புகார் குறித்து கேட்டறிந்த துணை முதலமைச்சர், அந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு தேங்கிய மழை நீரை அகற்றிட உத்தரவிட்டார். செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், மழை பாதிப்பு குறித்து தொலைபேசியின் மூலம் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த புகாரை அடுத்து நேரடியாக அந்த பகு திக்கு வந்து ஆய்வு மேற்கொண்டி ருப்பதாகவும் தெரிவித்தார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளில் அமைச்சர்கள் மற்றும் அதி காரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளதாகவும், மழை பாதிப்பு உள்ள டெல்டா மாவட்டங்களை பார்வை யிட அமைச்சர்களை, முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் தொடர்ந்து பேசி வருவதாகவும், மழைப் பாதிப்பு குறித்து அனைத்து இடங்களி லும் எச்சரிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.