tamilnadu

img

395 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது துணை முதலமைச்சர் வழங்கினார்

395 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது  துணை முதலமைச்சர் வழங்கினார்

சென்னை, செப்.5 - ஆசிரியர் தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்ப டும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது.  அதன்படி, இந்த ஆண்டு 395 ஆசிரியர் களுக்கு விருதும், பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2,800 பணியிடங்களில் புதிய  ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆணை களையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (செப்.5) வழங்கி னார். இதற்கான விழா, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. இந்த விழாவில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்  தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கல்வித் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்று, விருது மற்றும் பண முடிப்பு வழங்கப்பட்டது. புதிய பணி நியமனம் பெறும் ஆசிரியர்களில் தொடக்கமாக 40 பேருக்கு நியமன ஆணை கள் வழங்கப்பட்டன.