விவசாயி மீது கொலை வெறித்தாக்குதல் தேன்கனிக்கோட்டையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, ஆக. 8 - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயி கள் சங்க உறுப்பினர் ஏ.வெங்கடேஷ் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்து சனிக்கிழமையன்று தேன்கனிக் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. தேன்கனிக்கோட்டை வட்டம், கெல மங்கலம் ஒன்றியம், திப்பசந்திரம் கிராமத்தை சேர்ந்த ஏ.வெங்கடேஷ் வயது 56. அவர், தனது வாழ்வாதாரத்திற்காக விவ சாயம் செய்ய தனிநபர் ஒருவரிடம் ஒரு ஏக்கர் நிலம் கிரையம் மூலம் வாங்கி யுள்ளார். அந்த நிலம் அருகே வீடு கட்டி குடியிருக்கும் சின்னபுலிகான், முரளி, சிவக்குமார், முத்துராஜ், சுசிலா ஆகியோர் அந்த நிலத்தை தங்கள் வசப்படுத்திக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள னர். மீண்டும் பிரச்சனை வராமல் இருக்க அந்த நிலத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை வெங்கடேஷ் முற்பட்டார். அப்போது, முத்துராயன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சின்னபுலிகான், முரளி, சிவக்குமார், முத்துராஜ், சுசீலா ஆகி யோர் வெங்கடேசனை கொலை செய்வதற் காக கொடூர ஆயுதங்களால் தாக்கி வெட்டி சாய்த்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக உயி ருக்கு போராடியும் மருத்துவமனைக்கு செல்வதை தடுத்துள்ளனர். தற்போது ஓசூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டு வருகிறார். இந்த தாக்குதலை கண்டித்துள்ள சனிக்கிழமை (ஆக.9) தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட் டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் கிருஷ்ண கிரி மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ், தலைவர் எம் முருகேஷ் அறிவித்துள்ளார்.