tamilnadu

img

கன்னியாஸ்திரிகள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கன்னியாஸ்திரிகள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மக்கள் பணியே இறைப்பணி என்று செயலாற்றி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த அருட் சகோதரிகளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்திய பாஜக ஒன்றிய அரசு மற்றும் சத்திஸ்கர் மாநில அரசுகளை கண்டித்து வந்தவாசி கோட்டை மூலையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் கா. யாசர் அராபத் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அ.அப்துல் காதர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், விசிக நிர்வாகி இரா.மூவேந்தன் ஆசிரியர் சங்கம் மு.மாநில து.தலைவர் பெ.அரிதாசு, ஐமுமுக மாவட்டச் செயலாளர் அக்பர், காங்கிரஸ் எஸ்சி பிரிவு மாநில துணைத் தலைவர் ஆர்.ஜெயக்குமார், சிபிஎம் நகர செயலாளர் ந.ராதாகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.யூனிஸ்கரன், மலைவாழ் மக்கள் சங்கம் சுகுணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.