கேரள மாநிலம் போல் தமிழ்நாட்டிலும் எல்.ஐ.சி முகவர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, அக்.12- அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பூவலிங்கம் தலைமை வகித்தார். அஞ்சலித் தீர்மானத்தை மாநில செயல் தலைவர் அன்பு நடராஜன் வாசித்தார். வேலை அறிக்கையை மாநிலப் பொதுச் செயலாளர் (பொ) குமார் வாசித்தார். வரவு- செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் தாமோதரன் சமர்ப்பித்தார். தென் மண்டலத் தலைவர் பெல்லார்மின், மாநிலப் பொதுச் செயலாளர் கலாம் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். கேரள மாநிலம் போல் தமிழ்நாட்டிலும் எல்.ஐ.சி முகவர் களுக்கான நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். 85 வயது வரை முகவர்களுக்கு குழுக் காப்பீடு வழங்க வேண்டும். பாலிசிகள் மீதான கடனுக்கு வசூலிக்கப் படும் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். முகவர்கள் பணிக் கொடை வழங்கும் போது கணக்கீட்டு முறையை மாற்றி அமைத்து, கணக்கீட்டில் முதலாம் ஆண்டு கமிசனையும் சேர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயலாளர் ராஜா நன்றி கூறி னார்.