அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் மசோதாவை கைவிடக் கோரிக்கை
சென்னை, அக்.17: அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக (பிரவுன்பீல்ட் யுனிவர்சிட்டி) மாற்றும் “தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழ கங்கள் (திருத்தங்கள்) சட்டம் 2025” மசோதாவிற்கு கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மற்றும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கி ணைப்பாளர் பேரா.சோ.சுரேஷ் விடுத்த அறிக்கையில், உயர்கல்வியில் தனி யார்மயத்தை தீவிரப்படுத்தும் முயற்சி யாக இம்மசோதா அமைகிறது என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் அரசு நிதியில் உரு வாக்கப்பட்ட கட்டமைப்புகளை தனி யாருக்கு தாரைவார்ப்பது சமூக நீதிக்கு எதிரானது. பல்கலைக்கழகங்கள் அமைய நிலத்தின் பரப்பளவை குறைத்திருப்பதால் “பழுப்பு பல்கலைக் கழகங்கள்” - (அதாவது, அரசு உதவி யுடன் உருவான கட்டமைப்பை தனி யார் கொள்ளைக்காக மாற்றுவது) அதிக எண்ணிக்கையில் உருவாகும். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 8,500 கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்தி, 3,000 நிரந்தரப் பேரா சிரியர் பணியிடங்களை கவுரவ விரி வுரையாளர் பணியிடங்களாக உரு வாக்கியுள்ளது அரசு. இதன் தொ டர்ச்சியாக பழுப்பு பல்கலைக்கழ கங்களாக மாற்ற முயற்சிப்பது உயர் கல்விக்கான சமூகக் கடமையிலிருந்து அரசு விலக முயற்சிப்பதாகவே அமை யும். 2019-ல் நிறைவேற்றப்பட்ட தனி யார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் நிபந்தனைகளில் பெருமளவு தளர்வு அளிக்கும் இத்திருத்தம் மூலம், 69 சதவீத இடஒதுக்கீடு காலாவதியாகி, பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினரின் கல்வி உரிமைகள் பறிபோகும். சென்னை, மதுரை காமராசர் பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு போதிய நிதி வழங்காமல் இருப்பதும், பழுப்பு பல்கலைக்கழகங்களை உருவாக்கு வதும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துவதற்கான முயற்சி யாகும் என்று அவர் எச்சரித்துள்ளார். 2008ஆம் ஆண்டு நான்கு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற முயன்றபோது, பெரும் போராட்டத் தால் முதலமைச்சர் கலைஞர் அந்த முடிவை கைவிட்டார். அதே கொள் கையை முதலமைச்சர் ஸ்டாலினும் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப் பிட்டுள்ளார். அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கப் பொதுச்செயலாளர் வை.கோபிநாத் விடுத்த செய்தியில், அக்டோபர் 16 அன்று மூட்டா, ஏயுடி சங்கங்களுடன் இணைந்து கல்லூரி கள் முன்பு வாயில் முழக்க ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டதாகவும், சட்டம் திரும்பப் பெறப்படும் வரை தீவிர அறப்போராட்டங்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். “பழுப்பு பல்கலைக்கழகம்” என்றால் என்ன? பிரவுன்பீல்ட் யுனிவர்சிட்டி (Brown field University) என்பது ஏற்கனவே இயங்கிவரும் கல்வி நிறுவனங்களை (அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனி யார் கல்லூரிகள்) பல்கலைக்கழகமாக மாற்றுவதைக் குறிக்கும். தமிழ்நாடு சூழலில், அரசு மானி யத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், அரசு நிதியில் நியமிக்கப்பட்ட ஆசிரி யர்கள், பொது மக்களின் வரிப்பணத் தில் உருவாக்கப்பட்ட வசதிகள் - இவை அனைத்தும் தனியார் கைகளுக்கு மாறும் அபாயம் இருப்பதால், கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் இதை கடுமை யாக எதிர்க்கின்றன.